சென்னை தலைமை இடமாக கொண்ட ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள அதிகாரிகள், கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.1. பணியின் பெயர்: Officer Scale -1காலியிடங்கள்: 45சம்பளவிகிதம்: ரூ.14,500 - 25,700வயதுவரம்பு: 31.05.2011 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.2. பணியின் பெயர்: Junior Assistant-கிளெர்க் காலியிடங்கள்: 193சம்பளவிகிதம்: ரூ.7,200 - 19,300வயதுவரம்பு: 31.05.2011 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 3 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், முன்னாள் ராணுவத்திருக்கு மத்திய அரசு விதிகளின்படியும் சலுகை வழங்கப்படும்.கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: அதிகாரி பணிக்கு எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையிலும், கிளார்க் பணிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும்.விண்ணப்ப கட்டணம்: Officer Scale -1 பணிக்கு ரூ.450 (எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.350), கிளார்க் பணிக்கு ரூ.350 (எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 250) இதனை '' REPCO BANK RECRUITMENT CELL '' என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.-யாக செலுத்தவும். டி.டி.யின் பின்புறம் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட வேண்டும்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager (Admn), REPCO BANK Ltd., P.B.No. 1449, Door No.33, North Usman Road, T.Nagar, Chennai-17
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி தேதி: 09.07.2011
மேலும் விவரங்களுக்கு www. repcobank.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Section: Home > ரெப்கோ வங்கியில் கிளார்க், அதிகாரி வேலை
0 Comments:
Post a Comment