திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) எதிர்வரும் 18-09-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை “செயல்திறமிக்க கருத்துப் பரிமாற்றுத் திறமைகள்” (EFFECTIVE COMMUNICATION SKILLS) என்ற தலைப்பில் பொது மக்களுக்கான இலவச கருத்தரங்கு ஒன்றை KAPLAN Institute of Higher Learning, No.8 Wilkie Road, Wilkie Edge Building (Seminar Room No.218 - Level 2) என்ற முகவரியில் நடத்தவிருக்கிறது.
கருத்தரங்கு மற்றும் பயிலரங்குகள் நடத்துவதில் பல்லாண்டுகள் அனுபவம் பெற்ற திரு. ஹாஜா ஜபருல்லாஹ், இந்த இலவச கருத்தரங்கை பொது மக்களுக்காக நடத்தவிருக்கிறார். இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள், 63981020 என்ற தொலைப்பேசி எண்ணிலும், Email: contact@jmcalumni.org.sg என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். குறைந்த இருக்கைகளே மீதமுள்ளன.
இந்த இலவச கருத்தரங்குப் பற்றிய மேல் விபரங்களை, www.jmcalumni.org.sg என்ற முகவரியில் இணையத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment