தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்னும் மாணவி ரேங்க் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த தட்ஷிணி என்னும் மாணவி இரண்டாவது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி என்னும் மாணவி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ். விஜய் வெளியிட்டார். ஜூன் 30-ம் தேதி மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment