Report : Admin | on July 22, 2011 | at 3:59 am

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தாவூத் பாட்சா உதவித் தொகை


பாபநாசம்:தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், சேர இயலாத ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி உதவித் தொகை பெறலாம்.

இதுகுறித்து தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலுள்ள இராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரித் தலைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா தெரிவித்தது:

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதி கிடைத்தும், பொருளாதார வசதியின்மை காரணமாக சேர இயலாத அனைத்து மாணவர்களுக்கும், எங்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணம், ஐந்தாண்டுகளுக்கும் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.இந்த உதவித் தொகையால் எதிர்காலத்தில் மருத்துவராவோர் மூலம், பொதுமக்களுக்குச் சிறப்பான சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.எனினும், படிக்கும் காலத்தில் பல்கலை. தேர்வில் ஏதாவதொரு பாடத்தில் தோல்வியுற்றாலும், அதன்பின்னர் உதவித் தொகை நிறுத்தப்படும்.உதவித் தொகை பெற விரும்புவோர்,


தலைவர் மற்றும் செயலர்,
ஆர்.டி.பி. கலை, அறிவியல் கல்லூரி,
பாபநாசம்-614 205, தஞ்சை மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி: 04374-222123, 221267, 9443151267).

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News