இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரகார் ஏவுகணை நேற்று ஒரிசாவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பிரகார் ஏவுகணை முழுக்க, முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை. இது 150 கி.மீ. சுற்றளவுக்கு சென்று எதிரிகளை தாக்கும் சக்தி படைத்தது. இந்த ஏவுகணை ஒரிசாவில் சண்டிப்பூர் கடற்கரையோரம் நேற்று காலை 8.20 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பிரகார் ஏவுகணை 7.3 மீட்டர் நீளம் கொண்டது. இது 200 கிலோ வெடிபொருளுடன் 35 கி.மீ. உயரத்திற்கு பறந்து, 150 கி.மீ. தூர இலக்கில் சென்று தாக்கக் கூடியது. 4 நிமிடம், 10 வினாடிகளில் இலக்கை தாக்கி விடும். ஒரே நேரத்தில் 6 ஏவுகணைகளை வெவ்வேறு திசைகளில் ஏவலாம். ஏற்கனவே 40 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் பினாகா, 250 முதல் 350 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் பிருத்வி ஏவுகணைகளை இந்தியா தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Section: Home > 150 கி.மீ வரை பாயும் பிரகார் ஏவுகணை சோதனை வெற்றி.
0 Comments:
Post a Comment