Report : Admin | on August 11, 2011 | at 3:40 am

ரமலான் மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - வரலாற்று பார்வை


வெற்றிகள்:

1. கி.பி. 610ல் விண்ணுலகில் வீற்றிருந்த குர்ஆன் மண்ணுலகம் இறக்கப்பட்டது.

2. ஹிஜ்ரி 2: பிறை 12ல் குர்ஆனை எதிர்த்து நின்று குலப் பெருமை பேசிய குறைஷிப் படையை தலைகுனியச் செய்து பத்ருப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.

3. ஹிஜ்ரி 5: அரபுத் தேசமே அணி திரண்டு இஸ்லாத்தைப் பூண்டோடு அழிக்க முற்பட்ட அகழ் யுத்தத்தில் எதிரிகளுக்கு மரண பயம் உண்டாக்கி, கத கலங்க வைத்து முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.

4. ஹிஜ்ரி 8: பிறை 18ல் மக்கா வெற்றி அடைந்தது. அஞ்ஞான அரசோச்சி அரபு தேசம் ஆண்ட மக்கா மறை ஞானத்தின் மத்திய தலமாக மாறியது. அதே ஆண்டு யமன், ஈமானிய தேசமாக மாறியது. அதே ஆண்டு உஸ்ஸா என்ற சிலை உடைக்கப்பட்டது.

ஹிஜ்ரி 9: லாத் சிலை உடைக்கப்பட்டது. தாயிப் மக்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். அதே ஆண்டு தபூக் சென்று ரோம சாம்ராஜ்யத்தின் கதவுகள் தட்டப்பட்டன.

ஹிஜ்ரி 15: பாரசீகர்களைத் தோற்கடித்து காதிஸிய்யாவில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.

ஹிஜ்ரி 21: அரேபியாவைக் கடந்து இருண்ட கண்டமாக இருந்த ஐரோப்பாவில் இஸ்லாம் கால் பதித்தது. அன்று ஸ்பெயின் உட்பட ஐரோப்பாவே சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது.

ஹிஜ்ரி 92: தாரிக் பின் ஸியாத் ரொட்ரிக் மன்னனை வெற்றி கொண்டு கிழக்கு இஸ்லாமிய சூரியன் உதித்தது.

ஹிஜ்ரி 584: ஸப்த் கோட்டையைக் கைப்பற்றி சிலுவை வீரர்களிடமிருந்து ஃபலஸ்தீனைப் பாதுகாக்கும் முயற்சியில் ஸலாஹுத்தீன் அய்யூபி வெற்றி வாகை சூடினார்கள்.

ஹிஜ்ரி 658: இஸ்லாமிய தேசமெங்கும் நாசம் விளைவித்து பாலைவனங்களை செம்மண்ணாக மாற்றிய தார்த்தாரியர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் இருப்பையே இல்லாமல் செய்த எகிப்து சுல்தான் வெற்றி வாகை சூடினார்கள்.

ஏனைய நிகழ்வுகள்:

1. ஹிஜ்ரி 3ல் பிறை 15ல் அண்ணல் நபிகளாரின் அருமைப் பேரர் ஹஸன் (ரலி) அவர்கள் பிறந்தார்கள்.

லைலத்துல் கத்ர் என்னும் புனித இரவில் லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும் பேழையிலிருந்து திருக்குர்ஆன் இறங்கியது.

திருமணங்கள்:

1. ஹிஜ்ரி 3ல் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஸைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள்.

2. ஹிஜ்ரி 10ல் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள்.

மரணங்கள்:

1. அண்ணலாரின் அருமை மனைவி கதீஜா (ரலி) அவர்கள் அண்ணலாரின் 50வது வயதில் பிறை 11ல் மரணமடைந்தார்கள்.

2. ஹிஜ்ரி 2ல் பத்ருப் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அண்ணல் நபிகளாரின் அருமைப் புதல்வி ருகையா (ரலி) அவர்கள் தங்கள் 23வது வயதில் மரணமடைந்தார்கள்.

3. ஹிஜ்ரி 11ல் அண்ணலாரின் அருமைப் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் பிறை 3ல் (அண்ணலாரின் மறைவுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு) தங்கள் 29வது வயதில் மரணமடைந்தார்கள்.

4. ஹிஜ்ரி 32ல் பிறை 12ல் அண்ணலாரின் மாமா அப்பாஸ் (ரலி) அவர்கள் தங்கள் 88வது வயதில் மரணமடைந்தார்கள்.

5. ஹிஜ்ரி 40ல் பிறை 27ல் நான்காவது கலீஃபா அலீ (ரலி) அவர்கள் தங்கள் 57வது வயதில் மரணமடைந்தார்கள்.

6. ஹிஜ்ரி 50ல் அண்ணலாரின் அருமை மனைவி ஸஃபிய்யா (ரலி) அவர்கள் தங்கள் 50வது வயதில் மரணமடைந்தார்கள்.

7. ஹிஜ்ரி 58ல் அண்ணலாரின் அருமை மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கள் 65வது வயதில் மரணமடைந்தார்கள்.

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News