தூத்துக்குடி துறைமுகத்தில் இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 260 டன் அபாயகரமான கழிவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி துறைமுகத்திற்கு இங்கிலாந்தில் இருந்த வந்த கன்டெய்னர்கள் மீது வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவற்றை சோதனை செய்ததில் அதற்குள் மிகவும் அபாயகரமான கழிவுப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ. 1.22 கோடி மதிப்புள்ள ஷு மற்றும் அழகு சாதனப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சில மாதங்களுக்கு முன்னர், வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த 20 கன்டெய்னர்களில் 470 டன் எடையுள்ள அபாயகரமான கழிவுப் பொருட்கள் இருந்தது. அவை காகிதக் கழிவுகள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment