Report : Admin | on June 24, 2011 | at 2:39 am

மேற்கத்திய படைகளை எதிர்த்து இறுதிவரை போராடுவோம் - கடாபி ஆவேசம்



மேற்கத்திய படைகளை எதிர்த்து இறுதிவரை போராடுவோம் என லிபியா தலைவர் கடாபி தெரிவித்துள்ளார். லிபியாவில் அதிபர் கடாபியை பதவி விலகக்கோரி கிளர்ச்சியாளர்கள் , நேட்டோ படைகளின் உதவியுடன் போராடி வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி ஆதரவு படைகள், தாக்குதல் நடத்துவதால் அதை எதிர்த்து நேட்டோ படைகள் கடாபி ஆதரவாளர்கள் தங்கியுள்ள கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர் இதில் கடாபியின் நண்பர் ஹெமிதியும், அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர்.


அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, "டிவி' யில் பேசிய கடாபி குறிப்பிடுகையில், "நேட்டோ படைகள், ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தாமல், மக்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதலை நடத்துகின்றனர் இதை, ஐ.நா., பார்வையாளர்கள் பார்வையிட வேண்டும். எத்தனை ஆண்டுகளானாலும் மேற்கத்திய படைகளை எதிர்த்து போராட தயாராக இருக்கிறோம். சாவுக்கு நாங்கள் அஞ்சவில்லை. என்றார்.















0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News