ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக 4 கிராம் தங்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கமும் வழங்கும் திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார். மேலும், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கத்துடன், ரூ.50 ஆயிரம் ரொக்கம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளின் திருமணத்துக்கு உதவிடும் வகையிலும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் விரிவு செய்யப்பட்டுள்ளது.மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ், பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்வது, காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்வது, கை அல்லது கால் இழந்தோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்வது, மாற்றுத் திறனாளிகளை மாற்றுத் திறனாளிகள் திருமணம் செய்து கொள்வது ஆகியவற்றின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகைகள் அளிக்கப்படுகின்றன.
சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தாலிக்குத் தங்கம் மற்றும் ரொக்கம் வழங்கும் திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கும் அளித்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் தமிழகத்தில் உள்ள 76000 மாற்றுத் திறனாளிகள் பயன் பெறுவார்கள்.
Section: Home > ஏழைப் பெண்களின் திருமண நல திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
0 Comments:
Post a Comment