ஆன்மிக குரு ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அறையில் 11 கோடி ரொக்கப்பணம் மற்றும் 98 கிலோ தங்கம் இருந்தது.கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி சாய்பாபா முக்தி அடைந்தார். அதன் பின்னர் அவரது தனியறையான "யஜுர்வேத மந்திர்' திறக்கப்படாமலேயே இருந்தது. இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியதால் சத்ய சாய் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் சாய்பாபாவின் தனியறையைத் திறக்க முடிவு செய்தனர். அதன்படி வியாழக்கிழமை முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் சாய்பாபாவின் தனியறை திறக்கப்பட்டது.சாய்பாபாவின் தனியறையிலுள்ள பொருள்கள் குறித்த கணக்கெடுப்பு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.பி.மிஸ்ரா, ஓய்வுபெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதா மற்றும் சாய்பாபாவின் உறவினரும் அறக்கட்டளை உறுப்பினருமான ஆர்.ஜே.ரத்னாகர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடந்தது. பொருள்களின் மதிப்பீடுகளை அளவிட வருமான வரித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட "மதிப்பீட்டாளரும்' உடனிருந்தார். தனியறையிலிருந்து 11.56 கோடி ரூபாயும், 98 கிலோ தங்கமும், 307 கிலோ வெள்ளியும் எடுக்கப்பட்டன. பணம் பிரசாந்தி நிலையத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சத்ய சாய் சேவா அறக்கட்டளையின் கணக்கில் முதலீடு செய்யப்பட்டதாக ரத்னாகர் தெரிவித்தார்.
Section: Home > சாய்பாபாவின் அறையில் கோடி கணக்கில் பணம், நகை அதிர்சியுள்- அறக்கட்டளை நிர்வாகிகள்
0 Comments:
Post a Comment