சில்லரை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொபைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது. இதன் மூலம்,கடைகளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதனம் ஒன்றின் முன், உங்கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கணக்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும். கடைக்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும்.
. சாம்சங், மோட்டாரோலா, எச்.டி.சி
இனி ட்ரெயின், பஸ் அல்லது விமானப் பயணங்களுக்கு, இன்டர்நெட் மூலம் டிக்கட் எடுத்து, அதனை அச்செடுத்து, மறந்துவிடாமல் எடுத்துச் செல்லும் வேலை எல்லாம் இருக்காது. மொபைல் மூலமாகவே இன்டர்நெட்டில் டிக்கட் எடுத்து அதனைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். பின்னர், ஏறிச் செல்லும் வாகனங்களில் கதவுகளில் பதிந்து வைக்கப் பட்டுள்ள சாதனத்தின் முன், மொபைல் போனை ஆட்டிவிட்டு உள்ளே செல்லலாம்.
கடைகளில் பொருட்களை வாங்கிய பின்னர், மொபைல் போனை காசு வாங்கும் இயந்திரத்தின் முன் அசைத்துவிட்டு, ரசீது பெற்று பொருளை எடுத்துச் சென்றுவிடலாம். பணம் மட்டுமின்றி, வாகன ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை போன்றவற்றையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிடுகிறது.
இதில் மோசடி நடக்காமல் இருக்க அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கூகுள் கொண்டு வந்துள்ளது. மொபைல் போனில் இது இருந்தாலும், போன் இயக்கத்துடன் கலக்காமல் தனி சிஸ்டம் மற்றும் மெமரியில் என்.எப்.சி. சிப் இயங்கும். போன் இயக்கத்திற்கென ஒரு PIN எண்ணும், மொபைல் மணி பர்ஸுக்கென இன்னொரு PIN எண்ணும் பயன்படுத்த வேண்டும்.
கூகுளின் இந்த புதிய நிதி வர்த்தக நடவடிக்கை அதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மற்றும் அவை இயங்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்து பவர்களை அதன் வளையத்திற்குள் கொண்டு வரும். வர்த்தகத்தில் ஈடுபடாமலேயே, பன்னாட்டளவில் பெரிய வர்த்தக நிறுவனமாக கூகுள் மாறும்.
Section: Home > உங்கள் மொபைல் ஃபோன் மணி பர்ஸாக மாறபோகிறது.
0 Comments:
Post a Comment