Report : Admin | on June 16, 2011 | at 8:11 pm

அருணாசலப் பிரதேசத்தில் கடும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு.



பிரதேச மாநிலத்தில் கடும் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலைகள் மற்றும் தொடர்பு சாலைகளில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஹமிபூர் - பிலாஸ்பூர் சிம்லா நெடுஞ்சாலை, மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. யுனா, மெஹ்ரே, அம்ப், நடான், பங்கனா, பச்சட், சிம்லா ஆகிய பகுதிகளில் தட்பவெப்ப நிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. சிம்லாவில் மட்டும் இன்று காலை வரை 16.4 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது.

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News