தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை மூன்று மாதங்களுக்குள் கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.ஆட்சிக்கு வந்தால் அரசு கேபிள் டி.வி. திட்டம் அமல்படுத்தப்படும்' என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒருபகுதியாக, சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.இந்தச் சந்திப்பின் போது கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாகத் தெரிகிறது. சேனல்களை டிஜிட்டல்மயமாக்க வேண்டும், சென்னை நகரில் இருப்பது போன்று அனைத்து மாவட்டங்களிலும் சேனல்களை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் முன்வைத்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Section: Home > 3 மாதங்களுக்குள் அரசு கேபிள் டி.வி-முதல்வர் உறுதி
0 Comments:
Post a Comment