Report : Admin | on June 23, 2011 | at 11:42 pm

உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள் .


உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர் .
அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும் , ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ,
இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும் , ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர் .
உலக மக்கள் தொகையில் 1 . 5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர் .அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ,நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும் , 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர் .ஒவ்வொரு ஐந்து மனிதனுக்கும் ஒரு முஸ்லிம் ,ஒரு ஹிந்துவுக்கு இரண்டு முஸ்லிம் ,ஒரு புத்தனுக்கு இரண்டு முஸ்லிம் ,ஒரு யூதருக்கு இரண்டு முஸ்லிம்
முஸ்லிம்களே மக்கள் தொகையில் அதிகமாக இருக்ககூடிய நீங்கள் ஏன் யூதர்களை பார்த்து பயப்படுகிறீர்கள் ?
யூதர்களுக்கு சில உதாரணங்கள் :
அவர்கள் கல்வி , வேலை வாய்ப்பு , தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன ?
உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் 500 பல்கலைகழகங்கள் உள்ளன . ஆனால்
அமெரிக்காவில் மட்டும் 5758 பல்கலைகழகங்கள் உள்ளன .
இந்தியாவில் மட்டும் 8407 பல்கலைகழகங்கள் உள்ளன .
உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள் ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை .
உலகில் 90 % கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர் .
முஸ்லிம்களின் கல்வியறிவு 40 % மட்டுமே .
கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள் 100 % கல்வியறிவை பெற்றுள்ளனர் .
முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை .
கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98 % பூர்த்தி செய்துள்ளன .
முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50 % பூர்த்தி செய்துள்ளன .
40 % கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர் .
ஆனால் முஸ்லிகள் 2 % பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர் .
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே
உள்ளனர் . ஆனால் அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் இருக்கிறார்கள் .
எனவே முஸ்லிம்களே ஓன்று படுங்கள் கல்வியறிவை பெறுங்கள் உலகில் தலை சிறந்து விளங்குங்கள் .
இது உலக முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்ட விசயமாக இருந்தாலும் தமிழக முஸ்லிம்களே நீங்களும்
விழிப்புணர்வுடன் இருங்கள் . இந்த பதிவின் முழுமையான ஆங்கில பதிவு இணைப்பில் உள்ளது.

ஆக்கம் : ஹாபீஸ் A . B . முஹம்மது . நிர்வாகி அல் பரகா வங்கி.

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News