Report : Admin | on June 28, 2011 | at 7:52 pm

சிசேரியன் பிரசவத்தால் ஆபத்து உண்டா?


சுஉலகெங்கும் உள்ள பலக் கோடிக்கணக்கான உயிரினங்கள் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன, சிறிய பூச்சியிருந்து பெரிய யானை போன்ற மிருகம் வரை சுகப்பிரசவம் ஏற்படுகின்றபோது மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள அதிகம் படித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது, சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ன சொல்கிறீர்கள்? என்று மிரட்டும் போது சிசேரியனுக்கு சம்பதிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். டாக்டர்களும் வந்த கணவர் அல்லது உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு சட்ட பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். சட்டம் ஓர் இருட்டறை என்பது இந்த பிரசவ அறைக்கும் பொருந்தும், பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது! காரணம் நாம்தான் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோமே.

அப்படியானால் சிசேரியன் தேவையே இல்லையா? என்று கேட்டால் அதற்கு பதில் இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும், சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்களே. தற்போது டாக்டர்கள் தரும் தேவையில்லாத மருந்துகளும் வேறு சில காரணங்களும் சுகபிரசவத்தையே மாற்றுகின்றன.
கர்ப்பம் ஆனவுடன் டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத்தன்மையை மாற்றிவிடுகின்றது. இரும்புச்சத்து மாத்திரைகள் சுகப்பிரசவத்திற்கு முதல் எதிரி, தேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள், இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லுவதில்லை.
கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்)இயற்கையாக பெரும் முறைகள
கால்சியம் மாத்திரைகள்பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி
இரும்புச் சத்து மாத்திரைகள்பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை
அயோடின்மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள்
குளோரின்உப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம்.
பாஸ்பரஸ்பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள்
மக்னீசியம்பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள்
பொட்டாசியம்வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள்
சோடியம்இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன
குரோமியம், செலினியம், மாங்கனீஸ்எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது.
விட்டமின் ஏ (ரெட்டினால்)மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம்
விட்டமின் டீ (கால்சிடெரால்)கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி
விட்டமின் ஈ (டோகோபெரால்)தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி
விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்)புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய்
விட்டமின் பி 1 (தயாமின்)கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு
விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்)ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள்
விட்டமின் பி 3 (நியாசின்)ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை
விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்)ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை)
விட்டமின் போலிக் ஆசிட்ஈரல், முட்டை, கீரைகள்
விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்)ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை
விட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்)நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி
சுமார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள், அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆகர்ப்பம் அடைந்தவுடன் எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானது, சில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. வேலைகள் செய்ய வேண்டாம் என்பது படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள். கிராமங்களில் நாம் பார்த்திருப்போம், கர்ப்பிணி பெண்கள் தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் சுமந்து செல்வதையும், எத்தனையோ மலைப் பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு தலையில் சுமந்து எடுத்துச் செல்வதையும். சந்தோஷமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்! காரணம் புரிகின்றதா?


சிசேரியன் மோசடிகள்

அதிகபட்சம் மூன்று சிசேரியன் மட்டுமே செய்ய முடியும் என்பதை பல டாக்டர்களும் கிளிபிள்ளை சொல்வதை போல் சொல்வார்கள், நம்நாட்டில் சுய அறிவை அடகுவைத்து மனப்பாடம் செய்து மருத்துவம் பார்ப்பவர்களிடம் வேறு என்ன பதிலை எதிர்பாக்க முடியும்?.


அதேபோல் முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது. சிசேரியன் செய்த பிறகும் அதற்கு அடுத்து சுகபிரசவத்திற்கு எவ்வளவோ வாய்ப்பிருக்கின்றது, எத்தனையோ பேருக்கு இதுபோல் குழந்தை பிறந்திருக்கின்றது.
தேவையில்லாத மருத்துவ செயல்கள்: விஞ்ஞான வளர்ச்சியை தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய நடைமுறையாகிவிட்டது. உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில் ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது, இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம். தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத ஸ்கேன், டெஸ்டுகள், மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை எளிதாக்கும்.

சிசேரியன் செய்வதால் உண்டாகும் நோய்கள்: சிசேரியன் செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல் உடலில் புதிய பிரச்சனைகள், பதிய நோய்கள் உண்டாகும்.

தொப்புளிலிருந்து நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-மாதவிடாய் கோளாறுகள் (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea) அடிக்கடி நிறுநீர் போகுதல், சிறுநீர் கசிவு, படியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் வெளியேறுதல், கர்பப்பை இறங்குதல், அடிவயிறு வீங்கி போகுதல்.

தொப்புளிலிருந்து 0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-வயிற்றுவலி, அதிகமான மாதவிடாய், குடல் இறக்கம், கட்டிகள் உருவாகுதல், கற்பபை இறங்குதல், சீதபேதி, சிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல், வயிற்று போக்கு, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், குடல் வீக்கம், செரிமான கோளாறு, விலாவலி, தொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர வாய்ப்பிருக்கின்றது.

சிசேரியன் செய்த இடத்தை பொருத்து நோய்கள் வரும், இதனால் பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது.

சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்?: கர்ப்பமானவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள், விட்டமின் மாத்திரைகள் வேறு சில தேவையில்லாத மாத்திரைகள், அவசியமில்லா ஓய்வுகள், வேலை செய்யமல் இருப்பது, அவசியமில்லாத ஸ்கேன், அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில் நிறுத்துங்கள்.

கர்ப்பமாக இருக்கும் நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோ? ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ? அதே போன்று இயற்கையான காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான்.

ஆதிவாசிகள், குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான வாழ்க்கை வாழ்கின்றார்கள், சுகப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன், விட்டமின் மாத்திரை, டானிக், டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது.

வலி இல்லா சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்:கால் சுண்டுவிரலில் வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து (மஸாஜ்) விட வேண்டும், பிரசவ நேரம் நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும். குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும். சாதாரண நிலையில் 1 அல்லது 2 நிமிடம் கசக்கி விட்டாலே போதும், பிரசவம் சிரமம் என்று தெரிந்தால் அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும்.

பிரசவ நேரத்தில் வலி அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் .வத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே! சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள். இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(?), வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்மார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள், அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆனவர்களாகவும் அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே பிறந்த பலருக்கு, அவர்கள் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே! சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள். இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(?), வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்


சிசேரியன் பிரசவத்தால் ஆபத்து உண்டா?

[ பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால் எல்லா அறுவை சிகிச்சைகளிலும் அந்த ஆபத்து உண்டு. ஏதாவது தொற்றுநோயோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
மிக அரிதாக கர்ப்பப்பையை வெட்டிய இடம் மிகப் பலவீனமாக மாற வாய்ப்பிருக்கிறது. இது குடலிறக்கத்துக்கு வழி வகுத்து விடுகிறது. முதல் பிரசவம் சிசேரியன் என்பதால், அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். உங்களது அடுத்த பிரசவம் இயல்பாக பெண்ணுறுப்பின் வழியே நிகழ வாய்ப்பிருக்கிறது.
ஆனால், உங்களுக்கு சிசேரியன் எந்தக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து, அடுத்த பிரசவமும் சிசேரியனாக அமையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.]

ஆசிய நாடுகளில் இப்போது சிசேரியன் பிரசவம் வேகமாக அதிகரித்துக்கொண்டு வருகிறது. மெடிகல் மெகசீன்களில் வரும் கணக்கெடுப்பின்படி பார்த்தால், கிட்டத்தட்ட நாற்பத்தைந்து சதவீதம், சிசேரியன் பிரசவம் அதிகரித்திருக்கிறது. மருத்துவர்கள் இந்த அதிகரிப்பைக் கண்டு அதிர்ந்து போய் இருக்கிறார்கள். இதைக் குறைப்பதற்குச் செய்யவேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் ஆராய்ந்து வருகிறார்கள்

சிசேரியன் முறை பிரசவம் என்றால் என்ன?
பெண்ணுறுப்பின் வழியாக குழந்தை வர முடியாமலிருக்கும் போதோ அல்லது அப்படி வருவது அபாயகரமானதாக இருக்கும் போதோ அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, குழந்தை வெளிக்கொண்டு வரப்படுகிறது. இதைத்தான் சிசேரியன் முறை பிரசவம் என்கிறார்கள்.

மருத்துவர், தாயின் அடிவயிற்றையும், கர்ப்பப்பையையும் அறுத்து குழந்தையை வெளியில் எடுக்கிறார். இதை “சிசெக்ஷன்’ என்றும் சொல்லுவதுண்டு. இந்த சிசேரியன் முறை பல பச்சிளங்குழந்தைகளின் உயிரையும், அவற்றின் அம்மாக்களின் உயிர்களையும் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், தாம தமாகும் நோர்மலான பெண்ணுறுப்பு வழி பிரசவத்தினால் வரக்கூடிய பிரச்சினைக ளையும் தடுக்கிறது.

சிசேரியன் முறையை எப்போது உபயோகிக்கலாம்?
தேர்ந்தெடுத்த சிசேரியன் முறை பிரசவ வலி எடுப்பதற்கோ, பெண்ணு றுப்பின் வழியே பிரசவம் நடப்பதற்கோ மருத்துவ ரீதியாகப் பிரச்சினைகள் இருந்தால், பிரசவ வலி வரும் முன்பே சிசேரியன் செய்யப்படும். உதாரணமாக, கர்ப்பம் தொடர்வதால் தாய் அல்லது குழந்தைக்கு ஆபத்து என்ற சூழலிலோ அல்லது இயல்பான பிரசவம் முடியாத போதோ அல்லது ஆபத்தாக இருக்கும்போதோ சிசேரியன் செய்யப்படும். இதைத் திட்டமிட்ட சிசேரியன்’ அல்லது தேர்ந்தெடுத்த சிசேரியன் முறை’ என்று சொல்லுவார்கள்.

அவசர சிசேரியன் முறை

பிரசவ வலி ஆரம்பிக்கும் போதோ அல்லது பிரசவ வலியின் போதோ சில பிரச்சினைகள் உருவானால், உடனடியாக சிசேரியன் செய்யப்படுகிறது. பொதுவாக பின்வரும் சூழல்களில் தான் சிசேரியன் செய்யப்படுகிறது.

o பிரசவத்தின்போது, குழந்தையின் கீழிருக் கும் பாகம் தலையாக இல்லாமல் குழந்தையின் பின்புறமாகவோ, முகமாகவோ, நெற்றியோ அல்லது தோளாகவோ இருந்தால் சிசேரியன் அவசியப்படும்.
o பல பெண்களுக்கு பிரசவ வலியின் போது, செர்விக்ஸ் (கர்ப்பப்பையின் வாய்ப் பகுதி) விரிவடையத் தொடங்கும். ஆனால், முழுவதும் விரிவதற்கு முன்பு விரிவடைவது நின்றுவிடும். இதற்காக ஆக்ஸிடாசின் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த மருந்து கொடுத்தும் சில பெண்களால் முழுமையாக செர்விக்ஸை விரிக்க இயலாது. அதனால், அவரால் பெண்ணுறுப்பு வழியே பிரசவிக்க முடியாது.

o வேறு சில பெண்களுக்கு செர்விக்ஸ் முழுமையாக விரிவடையும். ஆனால், முக்கி குழந்தையை பிறப்புக் குழாய் வழியே வெளியில் தள்ள இயலாது. பிறப்புக் குழாயை விட குழந்தை மிகப்பெரிதாக இருந்தால், இந்த நிலை உருவாகும்.
o பிரசவ வலியின்போது எந்த நேரத்திலும், பிரச்சினைகள் உருவாகி குழந்தையின் இதயத்துடிப்புகள் குறையத் தொடங்கலாம். குழந்தையால் நோர்மல் பிரசவத்தை இதற்கு மேல் தாங்க முடியாது என்பதற்கு இது அறிகுறி. அதனால், உடனடியாக சிசேரியன் செய்யப்படும்.

சிசேரியன் செய்யும் முறை என்ன?

சிசேரியனில் தாய்க்கு முழுமையான மயக்கத்துக்கு மருந்து கொடுக்கப்படுகிறது அல்லது குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப்போகவும் மருந்து கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் மயக்க மருந்து தரப்படும்போது, அந்த இடம் மட்டும் மரத்துப்போய் வலி தெரியாது. ஆனால் தாய்க்கு நினைவிருக்கும்.

பொதுவான மயக்கத்தில் தசைகள் இலகுவாகி தூக்கம் வந்துவிடும். வலி தெரியாது. நினைவும் இருக்காது. கர்ப்பப்பையிலிருந்து குழந்தையை வெளியே எடுப்பதற்காக, தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றை வெட்டுவார் மருத்துவர். பிறகு குழந்தை, நஞ்சுக்கொடி, பிரசவப்பை எல்லாவற்றையும் வெளியில் எடுத்து வெட்டப்பட்ட கர்ப்பப்பையையும் அடிவயிற்றையும் தைத்து விடுவார்.

சிசேரியனுக்குப் பிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

o தாயின் உடல் நிலையைப் பொறுத்து நான்கிலிருந்து ஆறு நாட்கள் வரை மருத்து வமனையில் இருக்க வேண்டும். மருத்து வமனையிலிருந்து வீடு திரும்பியதும் மெல்ல உங்கள் வழக்கமான எளிய பணிகளைத் தொடக்கலாம்.
o சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குள்ளேயே உங்களுடைய எல்லா வேலைகளையுமே செய்ய இயலும்.

o ஆபரேஷன் முடிந்து ஓரிரு நாட்களில், நீங்கள் சாதாரண உணவை உட்கொள்ளலாம். சிசேரியனுக்கு உணவுக் கட்டுப்பாடுகள் கிடையாது. சமச்சீரான உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. உணவில் புரதச்சத்து கொஞ்சம் அதிகம் இருக்கட்டும்.

o நெய் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்களைத் தவிர்க்கவும். காரணம், கர்ப்ப காலத்தின்போது உடல் எடை கூடியிருக்கும். அதைக் குறைப்பதற்கு இந்தக் கொழுப்பு உணவுகள் எந்தவகையிலும் உதவாது.

o ஆறு வாரங்களுக்கு அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். அதே போல் தாம்பத்திய உறவையும் ஆறு வாரங்களுக்குத் தவிர்த்து விடுங்கள்.

o நான்கிலிருந்து ஆறுவாரங்களுக்குப் பிறகு, அடிவயிற்றுத் தசைகளுக்கான உடற் பயிற்சிகளைத் தொடக்கலாம். தவிர சிசேரியனுக்குப் பிறகு வேறென்ன செய்ய வேண்டும்… எப்போதெல்லாம் பரிசோதனைக்கு வரவேண் டும் என்பதையெல்லாம் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். சிசேரியனால் ஆபத்து உண்டா?

பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால் எல்லா அறுவை சிகிச்சைகளிலும் அந்த ஆபத்து உண்டு. ஏதாவது தொற்றுநோயோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மிக அரிதாக கர்ப்பப்பையை வெட்டிய இடம் மிகப் பலவீனமாக மாற வாய்ப்பிருக்கிறது. இது குடலிறக்கத்துக்கு வழி வகுத்து விடுகிறது. முதல் பிரசவம் சிசேரியன் என்பதால், அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். உங்களது அடுத்த பிரசவம் இயல்பாக பெண்ணுறுப்பின் வழியே நிகழ வாய்ப்பிருக்கிறது.
ஆனால், உங்களுக்கு சிசேரியன் எந்தக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து, அடுத்த பிரசவமும் சிசேரியனாக அமையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன

ஓர் உண்மையை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள், கர்ப்பமாகும் யாரும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும், காது இப்படி வேண்டும், கை இப்படி வேண்டும், முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி செய்வதும் இல்லை, அதற்காக யாரும் இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லை (நவூதுபில்லாஹ்), எல்லாம் இறையருளால் இயற்கையாக நலமாக அமைகின்றது. அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும், தேவையில்லாத தொல்லைகள், மருந்துகள் கொடுக்கமலிருந்தாலே போதுமானது. எனவே நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நம்மையும் நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிப்போம், அதற்காக பாடுபடுவோம்..வெற்றி பெறுவோம்;..இன்ஷா அல்லாஹ்..

நன்றி
hassan khan,
hash 10 mobile showroom, coimbatore.

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News