Report : Admin | on July 30, 2011 | at 3:29 am

பாகிஸ்தான் ஜெயிலில் இருந்த 24 இந்தியர்கள் விடுதலை லாகூர்


பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி நேற்று சுற்று பயணமாக இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவுடன் பாகிஸ்தான் நட்பு உறவு தொடர இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் பேச்சு நடத்தினார். பின்பு இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினார். பாகிஸ்தானுடன் நட்புறவை தொடர இந்திய ஜெயில்களில் இருந்த பாகிஸ்தான் மீனவர்கள் 87 பேர் விடுவிக்கப் பட்டு, பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியர்கள் 24 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 14 மீனவர்கள் கடந்த 15 மாதங்களாக கராச்சி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விடுவிக்கப்பட்டவர்களில் 2 பேர் பெண்கள். அனைவரும் வாகா எல்லை வழியாக இந்தியாவுக்குள் வந்து சேர்ந்தனர்.

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News