கிரீஸ் நாட்டில் இருந்து தனியார் தொண்டு நிறுவன குழு 36 ஆதரவாளர்களை கொண்டு காசா நோக்கி கப்பலில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த குழுவில் உள்ள பெரும்பாலான உறுபினர்கள் இங்கிலாந்த் மற்றும் அமெரிக்க நாட்டை சார்ந்தவர்கள் இவர்கள் பயணம் செய்யும் கப்பலில் அமெரிக்க கொடியுடன் இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்களை கப்பலில் தொங்கவிட்டும், தங்களின் சட்டையுல் "நான் ஒரு பாலஸ்தீனியன்" என்ற வாசகம் எழுதிய பெச் அணிந்தவாறு கப்பலில் பயணித்தார்கள். இவர்கள் பயணிக்கும் கப்பலுக்கு "தி ஆடசிட்டி ஒப் ஹோப்" என பெயரிடப்பட்டுள்ளது. இந்தகுளுவுக்கு அண்ணே ரைட் என்ற 64 வயதான பெண்மணி தலைவராக குழு உறுபினர்களால் தேர்ந்து எடுகபட்டார் இவர் முன்னால் அமெரிக்க ராணுவ அதிகாரியாக பதவியுல் இருந்தவர். அமெரிக்க ஈராக் மீது போர் தொடுத்ததை கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதிய நூலான "தி ஆடசிட்டி ஒப் ஹோப்" பெயரை தான் எங்கள் கப்பலுக்கு வைத்து உள்ளோம் ஏனென்றால் அமெரிக்காவின் அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான அரசாக இருப்பதால் இதை எதிர்க்கும் நோக்கில் இந்த பெயரை எங்கள் கப்பலுக்கு சுட்டினோம் என தெரிவித்தார். மேலும் எங்கள் கப்பலில் பயங்கர ஆயுதங்கள் உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது, அது உண்மை தான் எங்கள் கப்பலில் அதிநவீன ஆயுதங்கள் உள்ளது அது துப்பாக்கி மற்றும் வெடிபொருள்கள் அல்ல. அமெரிக்க குழந்தைகள் உள்பட அமெரிக்க மக்கள் காசா மக்களுக்கு அன்பை பரிமாறும் வகையுள் ஆயுரகனக்கான கடிதங்கள் எழுதியுள்ளனர் அதை தான் எங்கள் கப்பலில் வைத்து உள்ளோம் என கிண்டலாக பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
Section: Home > ப்லோட்டில ஆர்வலர்களின் படகு காசா நோக்கி பாய்ந்தது.
0 Comments:
Post a Comment